============================================ ============================================
Showing posts with label சொல் ஆய்வுகள். Show all posts
Showing posts with label சொல் ஆய்வுகள். Show all posts

Friday, October 26, 2012

சொல்வழி ஆய்வுகள் - முன்னுரை

இந்தப் பகுதியில் பத்துப்பாட்டு நூல்களின் சொல் ஆய்வுகள், சொல் வகுப்பு ஆய்வுகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த ஆய்வுகளுக்கு அடிப்படையானவை சொல்பிரிப்பு நெறிகளே. மரபு மூலங்களில் ஒவ்வோர் அடியும் சீர்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சீர்களிலும், சொற்கள் புணர்ச்சி இலக்கணத்தின்படி இணைக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பிரித்து, ஒவ்வோர் அடியையும் தனித்தனிச் சொற்களால் ஆக்கப்பட்டதாகச் செய்வதற்குச் சில நெறிமுறைகள் தேவைப்படுகின்றன.
இந்த ஆய்வின் ஆசிரியரால் உருவாக்கப்பட்ட சொற்பிரிப்பு நெறிகளின்படியே சொற்பிரிப்பு மூலங்கள் ஆக்கப்பட்டுள்ளன. இந்த மூலங்களே பலவித கணினி நிரல்களால் (Computer Programs) அலசப்பட்டு, தேவையான முடிபுகள் பெறப்பட்டன. இந்த மூலங்களில், கவனிக்கப்படாமல் விட்டுவிடப்பட்ட எழுத்துப்பிழைகள் இருக்கலாம். அவை அவ்வப்போது சரிசெய்யப்படுகின்றன. சொற்பிரிப்பு நெறிகளிலும் சிற்சில மாற்றங்கள் செய்யப்படுகின்றன. எனவே, இந்தப் பகுதியில் காணப்படும் சொற்களின் எண்ணிக்கை சிறிய அளவில் மாறுதலுக்கு உடபட்டது. எனினும் ஒட்டுமொத்த ஆய்வினை அது பெரிதும் பாதிப்பதற்கு வாய்ப்பில்லை. எனவே, இந்த ஆய்வுப்பகுதி தொடர்ந்த கண்காணிப்புக்கு உட்பட்டது.  பெரிதளவு மாற்றங்கள் தேவைப்படும்போது, கணினி நிரல்கள் மீண்டும் இயக்கப்பட்டு, புதிய முடிபுகள் பெறப்படும்.